தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீதான இறுதி நாள் விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரசு பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு:
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஆகஸ்டு 20ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் படி கடைசி நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. அதில் நீட் தேர்வு மற்றும் காவல் துறைக்கான சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்காக தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் திமுக அரசு அக்கறையுடன் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் 33 சதவிகித இடஒதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்திய மாதர் சம்மேளனம் சார்பாக போராட்டம் நடத்தியது.
![](https://img.dailythanthi.com/Articles/2021/Sep/202109131409433201_In-the-AIADMK-regime-637-notifications-not-fully-implemented_SECVPF.gif)
0 Comments