தமிழக போலீஸ் துறையில் 13406 பணியிடங்கள் - 2021 ஜூலை வரையிலான காலியிட
விவரம்
போலீஸ் துறைக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும்,
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் டி.பி.எஸ்., (தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ்)
அதிகாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழக போலீஸ் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் SI., முதல்Constable வரை தேர்வு
செய்யப்பட்டு வருகின்றனர். இதில் உடல் தகுதி, எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்
அடிப்படையில் ஸ்டேஷன், ஆயுதப்படை, பட்டாலியன் படைக்கு நியமிக்கப்படுகின்றனர்.
தற்போது தமிழகத்தில் 14 DGP-க்கள் உள்ளனர். DGP-க்கள் 17 பேர் உள்ளனர்.
உயர்அதிகாரிகள் பணியிடங்கள் பெரும்பாலும் உடனுக்குஉடன் நிரப்பப்படுகின்றன.
அதேசமயம் SI., முதல் Constable வரையிலான பணியிடங்கள் ஆண்டுதோறும்
பற்றாக்குறையாகவே உள்ளன.
2021 ஜூலை கணக்கெடுப்பின்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக
உள்ளன. இதனால் பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமையும், மனஅழுத்தமும்
ஏற்படுகிறது.வாரவிடுமுறை எடுக்க போலீசாருக்கு DGP., சைலேந்திரபாபு அனுமதித்துள்ள
நிலையில், ஆள் பற்றாக்குறையால் விடுமுறை எடுக்க அனுமதிப்பதே இல்லை என்பதே உண்மை.
போலீசார் நலன்கருதிஉடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
0 Comments