TNPSC குரூப் 4 தேர்வுக்கான முழு விவரங்கள் 2021

TNPSC குரூப் 4 தேர்வுக்கான முழு விவரங்கள் 2021
TNPSC GROUP 4 – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த GROUP -4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுகளை ஒன்றிணைத்து தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வின் மூலம் பல ஆயிரம் பேர் பலனடைய உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியான எவரும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TNPSC குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள்:
குறைந்த பட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு +2, இளங்கலை முதுகலை போன்ற பட்ட படிப்புகளை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தட்டச்சர் வேலைக்கு மட்டும் 10 ம் வகுப்பு தகுதியுடன் தட்ச்சு தமிழ்/ஆங்கிலம் ஏதேனும் ஒன்றில் இளநிலை ஒன்றில் முதுநிலை இரண்டிலும் முதுநிலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை.

வயது தகுதி:
குறைந்தபட்ச வயது தகுதி 18 வயது அதிகபட்டச வயது இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் கல்வித் தகுதி பொறுத்து மாறுபடும்.
OC – 30வயது
BC/BCM/MBC/DNC- 32 வயது
SC/SCA/ST.- 35 வயது
ஆதரவற்ற விதவை- 35 வயது (அனைத்து பிரிவு)
குறிப்பு +2 மற்றும் அதற்கு மேல் படித்த இடஒதுக்கீட்டு பிரிவினர் (BC/MBC/SC/ST) அனைவருக்கும் அதிகப்ட்ச வயது வரம்பு இல்லை.
தேர்வுக்கு தேவையானவை:
புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போதுமானது. பெரும்பாலான கேள்விகள் (95 சதவிகிதத்துக்கு மேல்) பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை அதிகம் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடந்த ஆண்டு வினாத்தாள்களைக்கொண்ட வினா வங்கியைக்கொண்டு, உங்களது தயாரிப்பை அவ்வப்போது சரியான வழியில் உள்ளதா எனச் சோதித்துக்கொள்ளுங்கள்.
கேள்வித்தாள் எப்படி அமையும்:
இந்தத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொதுத்தமிழ் / ஆங்கிலம் – 100 கேள்விகள், பொது அறிவு – 75 கேள்விகள் மற்றும் 25 கேள்விகள் கணிதம் மற்றும் நுன்னறிவு சார்ந்த கேள்விகள் அமையும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு மதிப்பிடப்படுகிறது.

TNPSC குரூப் 4- தேர்வில் எளிதில் வெற்றிபெற வழிகாட்டும் 12 டிப்ஸ்:
1.மொழிப்பாடத்துக்கு முக்கியத்துவம்
2.பாடங்களை வரிசைப்படுத்துங்கள்
3.சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்
4.திரும்பத் திரும்பப் படியுங்கள்
5.படிப்பை, தேர்வோடு தொடருங்கள்
6.கணிதத்துக்கு முக்கியத்துவம்
7.கால மேலாண்மை
8.நடப்பு நிகழ்வுகள்
9.நிறைய தேர்வு எழுதுங்கள்
10.தேர்வை எதிர்கொள்ளும் முறை
11.கேள்விகள் கடினமாக இருக்கும் என எதிர்பாருங்கள்
12.வெற்றியைக் கைவசமாக்குங்கள்

TNPSC குழு 4 தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும்?
பொது ஆய்வுகள் அறிவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் ஆகியவை அடங்கும்.

TNPSC GROUP 4 க்கான சிறந்த புத்தகங்கள் எது?
அறிவியல், சமூக, கணிதத்திற்கான 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழக மாநில வாரியத்தின் பாடப்புத்தகங்களையும், ஆங்கிலத்திற்கு 11, 12 ஆம் புத்தகங்களையும் பின்பற்றவும். அரிஹந்த் ஆண்டு புத்தகம் அல்லது தெளிவான பொது அறிவு. தினமும் செய்தித்தாளைப் பின்தொடர்ந்து நடப்பு விவகாரங்களை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தயார் செய்யுங்கள்.

TNPSC GROUP 4 தேர்வுகளில் எத்தனை முயற்சிகள் எடுக்கலாம்?
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முயற்சிகள் எடுக்கலாம். முயற்சிப்பது அவர்களின் அடிப்படை வயது வரம்பைப் பொறுத்தது. பொது வகை வேட்பாளர்கள் 18 வயது முதல் 35 வயது வரையில் பரீட்சைக்கு முயற்சி செய்யலாம்.

Post a Comment

0 Comments