திருச்சிராப்பள்ளி இல்லம் தேடிக் கல்வி மையங்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 797 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படுவதற்கு கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவேண்டும் :
இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு
1. இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் வழங்கப்பட்ட 4 அடி x 2.5 அடி அளவுள்ள தகவல் பலகை மையத்திற்கான அனைத்து விவரங்களையும் கொண்டு பொதுமக்களின் பார்வைக்கு இருக்கும்படி வைக்கப்பட வேண்டும் . தகவல் பலகையில் மைய எண் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
2. இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி , கழிப்பிட வசதி , மின்சார விளக்கு வசதி இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
மாவட்டத் திட்ட
3. மாவட்டத் திட்ட அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள எழுதுபொருள்களை மாணவர்கள் பயன்படுத்துதலை உறுதி செய்தல் வேண்டும்.
4. ஒன்றிற்கும் மேற்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்கள் பள்ளியில் நடைபெறும் போது வெவ்வேறு அறைகளில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
5. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்வி செயல்பாடுகள் முடிந்ததும் பெற்றோர்கள் அழைத்துச்செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
6. இல்லம் தேடிக் கல்வி மையம் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் மையம் செயல்படும் வரை மையத்தில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
7. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக் கட்டகம் , TLM அட்டை , TLM போஸ்டர் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பயன்படுத்துதலை உறுதி செய்தல் வேண்டும்.
உற்றுநோக்கல் படிவம்
8. உற்றுநோக்கல் படிவம் , மையத்திலுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் , தன்னார்வலர்களின் உறுதி மொழி மற்றும் குழந்தைகளின் உறுதி மொழி மையத்தில் வைத்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
9. இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கோவிட் -19 நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல் வேண்டும்.
குழந்தைகளிடம்
10. குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக தவறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை பள்ளி மேலாண்மைக்குழு கண்காணிக்க வேண்டும் . இது தொடர்பான புகார்களை தெரிவிக்கும் தொலைபேசி எண்கள் .1098 , 14417 தகவல் பலகையில் பார்வையில் படும்படி எழுதி வைத்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
ஆசிரியர் பயிற்றுநர்கள்
11. இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கற்றல் கற்பித்தல் நடைபெறும் போது பெற்றோர் . பள்ளி மேலாண்மை கல்விக்குழு உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் , சமூக அமைப்பு உறுப்பினர்கள் ( CSO ) , இல்லம் தேடிக் கல்வி தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
0 Comments